ADDED : மார் 28, 2024 11:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே மனைவியைக் காணவில்லை என போலீசில், கணவர் புகார் அளித்துள்ளார்.
சின்னசேலம் அடுத்த தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு மனைவி நித்யா,29; திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். லாரி டிரைவரான பிரபு சில மாதங்களாக மாமியார் வீட்டில் வசித்தார்.
இருவருக்குமிடையே குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், 23ம் தேதி முதல் நித்யாவைக் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து பிரபு அளித்த புகாரின் பேரில்,சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

