ADDED : ஆக 18, 2024 04:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே மனைவியைக் காணவில்லை என கணவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அடுத்த பெருவங்கூரையைச் சேர்ந்தவர் பிரசாந்த் மனைவி ஸ்டெல்லா, 21; இருவரும் காதலித்து, ஒரு மாதத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டனர். கடந்த 15ம் தேதி மதியம் 1:30 மணிக்கு பிரசாந்த் கள்ளக்குறிச்சிக்கு சென்றுள்ளார்.
பணிகள் முடிந்து மீண்டும் வீட்டிற்கு சென்று பார்த்த போது, ஸ்டெல்லாவைக் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து பிரசாந்த் அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்னர்.