/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
'நான் ரோஷக்காரன் தான்; பார்த்துக்கலாம் வாங்க' வார்த்தை போர் பிரசாரம்
/
'நான் ரோஷக்காரன் தான்; பார்த்துக்கலாம் வாங்க' வார்த்தை போர் பிரசாரம்
'நான் ரோஷக்காரன் தான்; பார்த்துக்கலாம் வாங்க' வார்த்தை போர் பிரசாரம்
'நான் ரோஷக்காரன் தான்; பார்த்துக்கலாம் வாங்க' வார்த்தை போர் பிரசாரம்
ADDED : மார் 28, 2024 11:19 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தொகுதியில் தி.மு.க., - அ.தி.மு.க., பிரமுகர்களின் 'வார்த்தை போர்' பிரசாரம் தேர்தல் களத்தை சூடுபிடிக்கச் செய்துள்ளது.
கள்ளக்குறிச்சி தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன், லோக்சபா தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் தி.மு.க., வெற்றி பெறவில்லையெனில், தனது மாவட்ட செயலாளர் மற்றும் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வதாகவும், அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் குமரகுருவை தேர்தல் களத்திற்கு வருமாறு சவால் விடுத்து சீண்டினார். இது இரு கட்சியினரிடையே பெரும் பேசு பொருளானது.
இதனையடுத்து அ.தி.மு.க.,வில் குமரகுரு வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், தி.மு.க., வசந்தம் கார்த்திகேயனின் சவாலை ஏற்று களத்தில் இறங்கியுள்ளதாக அ.தி.மு.க.,வினர் பூரிப்படைந்தனர்.
தற்போது தி.மு.க., - அ.தி.மு.க., வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சியில் நடந்த அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மோகன், 'ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் ரோஷக்காரர், சொன்னதை செய்வார் என தெரிகிறது. தேர்தலுக்கு பின் ரிஷிவந்தியம் தொகுதியில் இடைத்தேர்தல் நடப்பதற்கான வாய்ப்பு உள்ளதால், அதற்கும் தயாராக இருக்க வேண்டும்' என்றார்.
இந்நிலையில், வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தி.மு.க., வேட்பாளர் மலையரசனை ஆதரித்து ரங்கப்பனுார் கிராமத்தில் ஓட்டு சேகரித்தபோது, 'முன்னாள் அமைச்சர் மோகன் கூறியது போல் நான் ரோஷக்காரன் தான். நான் சொன்ன சொல்லில் மாற்றம் இல்லை. நாங்கள் தேர்தல் களத்திற்கு வாருங்கள் என்று தான் கூப்பிட்டோம். வரவேண்டாம் என்று கூறவில்லையே. இப்போதும் சொல்கிறேன், வாங்க பார்த்துகலாம்' என்றார்.
தி.மு.க., - அ.தி.மு.க.,வினரின் வார்த்தை போர் பிரசாரம் கள்ளக்குறிச்சி தொகுதி தேர்தல் களத்தை சூடுபிடிக்கச் செய்துள்ளது.

