/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சாலை பணிகளை முடிக்காவிட்டால் வரும் 29ம் தேதி கடையடைப்பு வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு

ADDED : ஆக 24, 2024 06:58 AM

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டில் அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் அனைத்து கட்சி சார்பில் செயற்குழு கூட்டம் நடந்தது.
மூங்கில்துறைப்பட்டில் நடைபெற்றஅனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் அனைத்து கட்சி சார்பில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்திற்கு அனைத்து வணிகர் சங்க தலைவர் தர்பார் தலைமை தாங்கினார்.அனைத்து வணிகர் சங்க மாநில இணைச் செயலாளர் சீனிவாசன், மாவட்ட துணைத் தலைவர் சிவகுமார், மாவட்ட இணைச் செயலாளர் ஜெயபால், தொகுதி செயலாளர்கள் பாலு, சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் செந்தில் முருகன் வரவேற்றார். நிகழ்ச்சியில் மூங்கில்துறைப்பட்டு பகுதியில் சாலை விரிவேக்கத்தின் போது சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டதை தொடர்ந்து சாலைப் பணியினை விரைவில் முடிக்காவிட்டால் வரும் 29ம் தேதி வியாழக்கிழமை முழு கடையடைப்பும், கருப்புக் கொடி ஏந்தி சாலை மறியல் போராட்டமும் நடைபெறும் என்று வியாபாரிகள் சங்கம் மற்றும் அனைத்து கட்சி சார்பில் தீர்மானத்தை நிறைவேற்றினர்.
கூட்டத்தில் சலீம், வாழ்வச்சனுார் வியாபாரி சங்கத் தலைவர் முனுசாமி, செயலாளர் தஸ்தகீர், அ.தி.மு.க., நிர்வாகிகள் சேகர், சரவணன், எஸ் வி.சி., நிர்வாகி சிராஜுதீன், முன்னாள் வணிகர் சங்கத் தலைவர் செல்வராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
வணிகர் சங்கத் துணைச் செயலாளர் சான்கான் நன்றி கூறினார்.