/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
'சைலண்ட் மோடில்' பா.ம.க., அதிருப்தியில் கூட்டணியினர்
/
'சைலண்ட் மோடில்' பா.ம.க., அதிருப்தியில் கூட்டணியினர்
'சைலண்ட் மோடில்' பா.ம.க., அதிருப்தியில் கூட்டணியினர்
'சைலண்ட் மோடில்' பா.ம.க., அதிருப்தியில் கூட்டணியினர்
ADDED : ஏப் 02, 2024 03:58 AM
ரிஷிவந்தியம், : ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதியில் சுவர் விளம்பரம் மற்றும் பிரசார பணி மேற்கொள்ளாமல் பா.ம.க., சைலண்டாக உள்ளது.
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதிக்குட்பட்ட ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதியில் சுவர் விளம்பரம் செய்வதில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இரண்டு பிரதான கட்சியிலும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டதும், செயல்வீரர்கள் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம், தேர்தல் அலுவலகம் திறப்பு, பிரசாரம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலமாக வேட்பாளர்கள் மக்களிடம் ஓட்டு சேகரிக்கின்றனர்.
இது தவிர தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள் தினமும் கிராமங்களுக்கு சென்று, பொதுமக்களை சந்தித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி ஆதரவு திரட்டி வருகின்றனர்.
ஆனால், பா.ஜ., கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க., இதுவரை பிரசார பணி மேற்கொள்ளாமல் சைலண்டாக உள்ளது.
சுவர் விளம்பரம் மூலமாக வேட்பாளரின் பெயரை மக்களிடத்தில் கொண்டு செல்வதிலும் ஆர்வம் இல்லை.
தொகுதியில் பா.ம.க.,வினர் அதிகம் வசிக்கும் கிராமங்களில் மட்டுமே மாம்பழம் சின்னம் மற்றும் வேட்பாளரின் பெயர் எழுதப்பட்டுள்ளது. அதேபோல் பிரசாரம், வேட்பாளர் அறிமுக கூட்டம், தேர்தல் பணி அலுவலகம் திறப்பு உள்ளிட்ட எவ்வித பணிகளும் ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதியில் மேற்கொள்ளவில்லை.
குறிப்பாக, கூட்டணியில் உள்ள முக்கிய நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக கூட சந்திக்காததால், பா.ஜ., - ஐ.ஜே.கே., - அ.ம.மு.க.,வினர் அதிருப்தியில் உள்ளனர்.

