/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தமிழ்ப் புதல்வன் திட்டம் துவக்க விழா
/
தமிழ்ப் புதல்வன் திட்டம் துவக்க விழா
ADDED : ஆக 11, 2024 05:13 AM

ரிஷிவந்தியம், : ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தமிழ்ப்புதல்வன் திட்டம் துவக்க விழா நடந்தது.
கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா வரவேற்றார்.
விழாவில் மாணவர்களுக்கு தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி ஏ.டி.எம்., கார்டு வழங்கப்பட்டது.
தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், பாரதிதாசன், துரைமுருகன், அசோக்குமார், ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி, துணைச் சேர்மன் சென்னம்மாள், பேரூராட்சி சேர்மன் ரேவதி, தாசில்தார் பாலகுரு, பி.டி.ஓ.,க்கள் சந்திரசேகரன், நடராஜன், மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.