/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரிமா சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
/
அரிமா சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
ADDED : ஜூலை 22, 2024 01:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: மணலுார்பேட்டை அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.
சங்கத் தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், முன்னாள் தலைவர் ஜெய்கணேஷ் முன்னிலை வகித்தனர். சங்க ஆலோசகர் முருகன் வரவேற்றார்.
விழாவில், புதிய ஆண்டிற்கான நிர்வாகிகளை முன்னாள் மாவட்ட ஆளுநர் சரவணன் சேவை பணியில் அமர்த்தி, வாழ்த்திப் பேசினார். மாவட்ட முதல் துணை ஆளுநர் ராஜா சுப்ரமணியம் புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வைத்தார்.
திருக்கோவிலுார், செஞ்சி, விழுப்புரம், சிதம்பரம் உள்ளிட்ட அரிமா சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.