/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இன்ட்ராக்ட் கிளப் துவக்க விழா
/
இன்ட்ராக்ட் கிளப் துவக்க விழா
ADDED : ஆக 17, 2024 03:25 AM

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் சாரதா வித்யாஷ்ரம் பள்ளியில் ரோட்டரி குழுமத்தின் சார்பில் இன்ட்ராக்ட் கிளப் துவக்க விழா நடந்தது.
திருக்கோவிலூர் ரோட்டரி கிளப் சார்பில் சாரதா வித்யாஷ்ரம் பள்ளியில், புதிதாக இன்ட்ராக்ட் கிளப் துவக்க விழா நடந்தது. பள்ளியின் தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஷீபா பிராங்க்ளின் வரவேற்றார். ரோட்டரி கிளப் தலைவர் செந்தில்குமார், இன்ட்ராக்ட் கிளப்பை துவக்கி வைத்தார். மாவட்டத் துணை ஆளுநர் இராமலிங்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இன்ட்ராக்ட் கிளப்பின் நிர்வாகிகளை தேர்வு செய்து, பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
ரோட்டரி கிளப் சாசன தலைவர் வாசன், செயலாளர் கோதம்சந்த், பொருளாளர் சௌந்தரராஜன், உறுப்பினர்கள் முத்துக்குமாரசுவாமி, கல்யாண குமார், ராஜேஷ்குமார், வழக்கறிஞர் ராஜேஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.