/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவக்க விழா
/
கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவக்க விழா
கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவக்க விழா
கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவக்க விழா
ADDED : செப் 08, 2024 06:49 AM

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டில் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2023-24ம் ஆண்டிற்கான சிறப்பு அரவை மற்றும் 2024-25ம் ஆண்டிற்கான பிரதான அரவைப் பருவம் நேற்று துவங்கியது.
கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். ஆலையின் செயலாட்சியர் கண்ணன் முன்னிலை வகித்தார். காலை சிறப்பு பூஜைக்குப்பின், அரவை துவங்கியது. தொடர்ந்து சர்க்கரை உற்பத்தி பகுதிகளை கலெக்டர் ஆய்வு செய்து ஆலையில் நிறுவப்பட்டுள்ள இணை மின் நிலைய திட்டத்தை பார்வையிட்டார்.
ஆலையின் செயல் ஆட்சியர் கூறுகையில், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டம் ஆலையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் பதிவு செய்யப்பட்ட கரும்பானது 3 லட்சத்து 40 ஆயிரம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஆலைக்கு பதிவு செய்துள்ள கரும்புகள் அனைத்தும் உரிய நேரத்தில் வெட்டி அறுவடை செய்து ஆலைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என விவசாயிகளிடம் கேட்டுக் கொண்டார்.
சங்கராபுரம் வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் அசோக்குமார், தமிழ்நாடு கரும்பு விவசாய சங்க தலைவர் கதிர்கோபால், விவசாயிகள், வாகன உரிமையாளர்கள் பங்கேற்றனர்.