/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திர தின விழா
/
கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திர தின விழா
கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திர தின விழா
கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திர தின விழா
ADDED : ஆக 17, 2024 03:30 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய சேர்மன் தேசிய கொடியேற்றி வைத்தார்.
கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திர தின விழா நடந்தது.
விழாவிற்கு ஒன்றிய சேர்மன் அலமேலு ஆறுமுகம் தலைமை தாங்கி, தேசிய கொடியேற்றி வைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் இனிப்புகள் வழங்கினார்.
தொடர்ந்து தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்றனர். பி.டி.ஓ.,க்கள் பூமா, செல்வகணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள், பள்ளி மாணவ மாணவிகள் பலர் பங்கேற்றனர்.