/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சர்க்கரை ஆலையில் அரவை துவக்கம்
/
சர்க்கரை ஆலையில் அரவை துவக்கம்
ADDED : ஆக 31, 2024 03:33 AM

கச்சிராயபாளையம்: கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் சிறப்பு அரவை பருவ துவக்க விழா நடந்தது.
கச்சிராயபாளையத்தில் கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலை அலகு 2 இயங்கி வருகிறது. இந்த ஆலையின் 2023-24ம் ஆண்டு சிறப்பு அரவை மற்றும் 2024- 25ம் ஆண்டின் முதன்மை அரவை பருவ துவக்க விழா நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு கலக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் உதயசூரியன், செந்தில்குமார், முன்னாள் அமைச்சர் மோகன் முன்னிலை வகித்தனர். ஆலை இணை பதிவாளர் யோகவிஷ்ணு வரவேற்றார்.
நிகழ்ச்சியில் முன்னாள் ஆலை தலைவர்கள் ராஜசேகர், அருணாசலம், வடிவேல் உட்பட ஆலை அங்கத்தினர்கள், பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், டிராக்டர்கள் உரிமையாளர்கள், டிரைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.