/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு புத்தாக்க, ஆளுமை திறன் பயிற்சி
/
கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு புத்தாக்க, ஆளுமை திறன் பயிற்சி
கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு புத்தாக்க, ஆளுமை திறன் பயிற்சி
கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு புத்தாக்க, ஆளுமை திறன் பயிற்சி
ADDED : மார் 07, 2025 07:11 AM

கள்ளக்குறிச்சி, : விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையம் சார்பில், கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு புத்தாக்க மற்றும் ஆளுமை திறன் பயிற்சி வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்த நிகழ்வில், மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கி பேசினார்.
துணைப்பதிவாளர் சுகந்த லதா முன்னிலை வகித்தார். கண்காணிப்பாளர் சசிகலா வரவேற்றார்.
இதில் கூட்டுறவு சட்டம் மற்றும் விதிகள் குறித்து ஓய்வு பெற்ற சார்பதிவாளர் மூர்த்தியும், முறைகேடுகளில் ஈடுபட்டால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து பொதுவிநியோக திட்ட துணைப்பதிவாளர் சுரேஷூம் பயிற்சி அளித்தனர்.
சங்கத்தின் தணிக்கைகள் மற்றும் கணக்கு பராமரித்தல் குறித்து தணிக்கை துறை அலுவலர் சுப்ரமணியன் பயிற்சி அளித்தார்.
மாவட்டத்தில், 832 கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், 100 பேருக்கு நேற்று முன்தினம் பயிற்சி அளிக்கப்பட்டது.
துணைப்பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர் சவிதா ராஜ், சார்பதிவாளர்கள் லட்சுமி, மனோன்மணி, கமலக்கண்ணன், சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டுறவு ஒன்றியத்தின் செயலாட்சியர் நிர்மல் நன்றி கூறினார்.