/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணை
/
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணை
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணை
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணை
ADDED : ஆக 13, 2024 06:32 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருணாபுரம், சேஷசமுத்திரம், மாதவச்சேரி ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து 229 பேர் பாதிக்கப்பட்டனர். 67 பேர் இறந்தனர். இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய 150 பேரிடம், ஒரு நபர் ஆணைய குழுவின் ஓய்வு பெற்ற நீதிபதி கோகுலதாஸ், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஒரு நபர் ஆணையம் அலுவலத்திற்கு வரவழைத்து விசாரணை செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து, கள்ளச்சாராயம் குடித்து இறந்த 68 குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு முதல் கட்டமாக 20 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதில் நேற்று 10 பேரின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது, கள்ளச்சாராயம் குடித்து இறந்த நபரின் தொழில், குடும்ப வருமானம், மது பழக்கம் எத்தனை ஆண்டுகளாக உள்ளது. கள்ளச்சாராயம் எங்கு வாங்கி குடித்தார், குடும்பத்தில் உள்ளவர்கள் கல்வி கற்கும் நிலை, குடும்பத்தில் உள்ளவர்களுக்கான வருங்கால தேவைகள் போன்ற பல்வேறு விபரங்கள் குறித்து கேட்டறிந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.