/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இணைய வழி பணம் இழப்பு புகார் செய்ய அறிவுறுத்தல்
/
இணைய வழி பணம் இழப்பு புகார் செய்ய அறிவுறுத்தல்
ADDED : ஆக 24, 2024 06:46 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், இணையவழியில் பல்வேறு வகைளில் ஆன் லைன் மூலம் பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
இதில் மக்கள் யாரும் சிக்க வேண்டாம் என்று சைபர் கிரைம் காவல் நிலையம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் ஏதேனும் இணையவழி குற்றம் மூலம் பண இழப்பு நடந்து 24 மணி நேரத்திற்குள் இணையவழி குற்ற இலவச உதவி எண் 1930 ஐ அழைத்தால் இழந்த பணத்தை மீட்க அதிக வாய்ப்புள்ளது. இணைய வழி பண இழப்பு மற்றும் பாதிக்கப்பட்டு இருந்தால் www.cybercrime.gov.in என்ற மின்னஞ்சல் மூலம் புகார் தெரிவிக்கலாம் என சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி செய்திகுறிப்பில் கூறியுள்ளார்.