/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் உலக தாய்மொழி நாள்
/
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் உலக தாய்மொழி நாள்
ADDED : பிப் 22, 2025 09:44 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கலை அறிவியல் கல்லுாரியில், தமிழ்த்துறை சார்பில் உலக தாய் மொழி நாள் விழா நடந்தது.
கல்வி நிறுவனங்களின் தலைவர் மகுடமுடி தலைமை தாங்கினார். நிர்வாக அலுவலர் மோகனசுந்தர் முன்னிலை வகித்தார். மாணவி காளேஸ்வரி வரவேற்றார். துணை முதல்வர் ஜான் விக்டர், துறைத்தலைவர் பிரவீனா வாழ்த்திப் பேசினர். சிறப்பு அழைப்பாளர் சினிமா பாடலாசிரியர் அறிவுமதி சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து, நடந்த கருத்தரங்கங்களில், பல்வேறு தலைப்புகளில் மாணவர்கள் பேசினர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி பேராசிரியர்கள் பிந்து, பன்னீர்செல்வம், கோமதி, பார்த்திபன், நித்யா, சுபலட்சுமி, பரசுராமன், தென்னரசு செய்தனர். மாணவி கிருத்திகா நன்றி கூறினார்.