ADDED : மார் 07, 2025 11:24 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் வணிகவியல் துறை சார்பில் வணிக நெறிமுறை மற்றும் தொழில் நெறி நடத்தை தொடர்பான பன்னாட்டு கருத்தரங்கம் நேற்று நடந்தது.
கல்லுாரி முதல்வர் முனியன் தலைமை தாங்கினார். வணிகவியல் துறை தலைவர் வீரலட்சுமி முன்னிலை வகித்தார். கவுரவ விரிவுரையாளர் தனபால் வரவேற்றார்.
கிழக்கு ஆப்பிரிக்கா, கேம்பலா பல்கலை கணக்கியல் மற்றும் நிதித்துறை பேராசிரியர் தமிழரசு, காணொளி காட்சி மூலம் மாணவர்களிடம் பேசினார்.
புதுச்சேரி பல்கலை வணிகவியல் துறை தலைவர் அருள்முருகன், சிதம்பரம் அண்ணாமலை பல்கலை வணிகயவில் துறை பேராசிரியர் சுந்தர் உரையாற்றினர்.
இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரி உதவி பேராசிரியர் ஆனந்தராமன், ஆத்துார் அரசு கல்லுாரி உதவி பேராசிரியர் லட்சுமி வாழ்த்தி பேசினர்.
கருத்தரங்கில் கள்ளக்குறிச்சி மற்றும் ஆத்துார் அரசு கல்லுாரி, பங்காரம் லட்சுமி கல்லுாரி, இந்திலி ஆர்.கே.எஸ். கல்லுாரி, தச்சூர் பாரதி மகளிர் கல்லுாரி, திட்டக்குடி அரசு கல்லுாரி மாணவ-மாணவியர் கட்டுரைகளை வாசித்தனர்.
கவுரவ விரிவுரையாளர் ராஜா நன்றி கூறினார்.