/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஜப்பான் ஷிட்டோ ரியோ கராத்தே கள்ளக்குறிச்சி மாணவர்கள் சாதனை
/
ஜப்பான் ஷிட்டோ ரியோ கராத்தே கள்ளக்குறிச்சி மாணவர்கள் சாதனை
ஜப்பான் ஷிட்டோ ரியோ கராத்தே கள்ளக்குறிச்சி மாணவர்கள் சாதனை
ஜப்பான் ஷிட்டோ ரியோ கராத்தே கள்ளக்குறிச்சி மாணவர்கள் சாதனை
ADDED : ஆக 15, 2024 05:54 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஜப்பான் ஷிட்டோ ரியோ கராத்தே பள்ளி மாணவர்கள் அகில இந்திய கராத்தே போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.
கள்ளக்குறிச்சி வ.உ.சி., நகரில் ஜப்பான் ஷிட்டோ ரியோ கராத்தே பயிற்சி நிறுவனம் உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் ஜப்பான் ஷிட்டோ ரியோ கராத்தே பள்ளியின் 48ம் ஆண்டு அகில இந்திய கராத்தே போட்டிகள் கடந்த வாரம் நடத்தப்பட்டது. ஜப்பான் ஷிட்டோ ரியோ கராத்தே பள்ளியின் தலைமை பயிற்றுனர் ரமேஷ் நடுவராக இருந்து போட்டிகளை நடத்தினார்.
கள்ளக்குறிச்சி கிளையின் மாஸ்டர் பாஸ்கர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்போட்டிகளில் பங்கேற்றனர். தமிழகத்திலிருந்து ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர்.
அகில இந்திய கராத்தே போட்டியில் கள்ளக்குறிச்சி மாணவர்கள் மகிழ், தேவராஜ், நித்தின்ஆண்டனி, கதிர்சிவா, ரெகான், அர்பாத், பிரியதர்ஷினி, ரித்திஷ், விஜய்தர்ஷன், மித்ரன், தேவா, தனிஷ், மனோஜ், பிரத்திகா ஆகியோர் வெற்றியடைந்து பிளாக் பெல்ட் பெற்றனர். தொடர்ந்து நடந்த கட்டா பிரிவில் தர்ஷன், தயாளன், முதல் இடத்தையும், ராகேஷ், யுவராஜ், சஞ்சித், விஸ்வா ஆகியோர் இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை திரைப்பட நடிகர் பிரிதிவிராஜ் பாராட்டி பரிசு வழங்கினார்.