/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாவட்ட அளவில் இறகு பந்து போட்டி கச்சிராயபாளையம் மாணவி முதலிடம்
/
மாவட்ட அளவில் இறகு பந்து போட்டி கச்சிராயபாளையம் மாணவி முதலிடம்
மாவட்ட அளவில் இறகு பந்து போட்டி கச்சிராயபாளையம் மாணவி முதலிடம்
மாவட்ட அளவில் இறகு பந்து போட்டி கச்சிராயபாளையம் மாணவி முதலிடம்
ADDED : ஆக 15, 2024 05:53 AM

கள்ளக்குறிச்சி: சென்னையில் நடந்த மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டியில் கச்சிராயபாளையம் மாணவி முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார்.
சென்னை குரோம்பேட்டையில் ஸ்டாப் அண்ட் பிளே விளையாட்டு கழகம் சார்பில் மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டிகள் நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றது.
இதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அடுத்த மாத்துாரைச் சேர்ந்த ஜீவிதா என்ற மாணவி, 9 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவு விளையாட்டு போட்டியில் பங்கேற்றார்.
அதில், மாணவி ஜீவிதா முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார்.
இதனையடுத்து அவருக்கு பரிசு கோப்பை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதனையடுத்து இறகு பந்து போட்டியில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்ற மாணவி ஜிவிதாவை, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.