/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பிறவியிலேயே காது கேளாத சிறுவனுக்கு அறுவை சிகிச்சை
/
பிறவியிலேயே காது கேளாத சிறுவனுக்கு அறுவை சிகிச்சை
ADDED : ஜூலை 14, 2024 06:29 AM

கள்ளக்குறிச்சி, : பிறவியிலேயே காது கேளாத சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த மாத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த பாபு மகன் கோவேந்தன்,3; இவருக்கு பிறவியிலேயே காது கேளாத குறைபாடு இருந்துள்ளது. இதனையடுத்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு சிறுவன் கோவேந்தனை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
அங்கு சிறுவனுக்கு பரிசோதனை செய்து சென்னையில் இருந்து காது, மூக்கு, தொண்டை நிபுணர் கொண்ட சிறப்பு மருத்துவரை வரவழைத்து, மாவட்டத்தில் முதன் முறையாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அதில் சிறுவன் கோவேந்தன் குணமடைந்து, காது கேட்கும் திறன் பெற்றார். தற்போது சிறுவனக்கு தொடர் பரிசோதனை மூலம் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.
இதுகுறித்து மருத்துவக் கல்லுாரி முதல்வர் நேரு கூறுகையில், 'பிறவிலேயே காது கேளாத குழந்தைகளுக்கு வாய் பேசும் திறனும் பாதிக்கப்படும். தற்போது அறுவை சிகிச்சை மூலம் காது கேட்கும் திறன் பெற்றுள்ள சிறுவனுக்கு, வரும் காலங்களில் வாய் பேசும் திறனும் மேம்படும்' என்றார்.