/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் விறுவிறுப்பான ஓட்டு எண்ணிக்கை
/
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் விறுவிறுப்பான ஓட்டு எண்ணிக்கை
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் விறுவிறுப்பான ஓட்டு எண்ணிக்கை
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் விறுவிறுப்பான ஓட்டு எண்ணிக்கை
ADDED : ஜூன் 05, 2024 12:10 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதல் தொடர்ந்து விறு, விறுப்பாக நடந்தது.
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில், கள்ளக் குறிச்சி (தனி), ரிஷிவந்தியம், சங்கராபுரம், ஆத்துார் (தனி), கெங்கைவல்லி (தனி), ஏற்காடு(தனி) ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. லோக்சபா தேர்தலில் தி.மு.க., மலையரசன், அ.தி.மு.க., குமரகுரு, பா.ம.க., தேவதாஸ், நாம் தமிழர் கட்சி ஜெகதீசன் உட்பட 21 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது. தொகுதியில் அரசு ஊழியர்கள், ராணுவ வீரர்கள், 85 வயது மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என 9,274 தபால் ஓட்டுக்கள் உள்ளது. இதில், 8,456 ஓட்டுக்கள் பதிவானது. தபால் ஓட்டுக்கள் அனைத்தும் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் 'ஸ்ட்ராங் ரூமில்' வைக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து, ஓட்டு எண்ணிக்கையை முன்னிட்டு, வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் 'ஸ்ட்ராங் ரூம்' திறக்கப்பட்டு, ஓட்டு பெட்டிகள் அனைத்தும், ஓட்டு எண்ணும் மைய மான அ.வாசுதேவனுாரில் உள்ள மகாபாரதி பொறியியல் கல்லுாரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டது.
தொடர்ந்து, காலை 8:15 மணியளவில் தபால் ஓட்டு பெட்டிகள் திறக்கப்பட்டது. தபால் ஓட்டுக்களை எண்ணுவதற்காக 6 மேசைகள் அமைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, ஓட்டு எண்ணும் அலுவலர்களிடம் தபால் ஓட்டுக்கள் தொகுதி வாரியாக பிரித்து வழங்கப்பட்டது. அங்கு, ஊழியர்கள் ரகசிய காப்பு உறுதிமொழி ஏற்ற பிறகு, ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.
இதனையடுத்து, கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமார், தேர்தல் பொதுபார்வையாளர் அசோக்குமார் கார்க், டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் ஆகியோர் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த 'ஸ்ட்ராங் ரூம்'களை திறந்தனர்.
தொடர்ந்து, ஓட்டுப்பதிவு இயந்திரங்களை ஊழியர்கள் ஓட்டு எண்ணும் மையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு காலை 8:45 மணியளவில் முகவர்கள் முன்னிலையில் ஓட்டு எண்ணிக்கை துவங்கியது.
தொடர்ந்து, 6 சட்டசபை தொகுதிகளிலும் ஓட்டு எண்ணிக்கை விறு, விறுப்பாக நடந்தது. ஓட்டுக்கள் எண்ணி முடிக்கப்பட்ட பிறகு சுற்று வாரியாக, எண்ணிக்கை விபரங்கள் ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது. ஓட்டு எண்ணும் மையத்தில் 690 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட நிலை யில், பாதுகாப்பு நடவடிக்கை கள் குறித்து எஸ்.பி., சமய்சிங்மீனா ஆய்வு செய்தார்.