/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி என்.சி.சி., மாணவர்களுக்கு தேசிய பிரிவினை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

ADDED : ஆக 17, 2024 03:23 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு பள்ளி என்.சி.சி., மாணவ, மாணவிகளுக்கு தேசிய பிரிவினை நினைவு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்தியாவை ஆண்ட, ஆங்கிலேயர்கள் சுதந்திரத்திற்கு முன்பாக இந்தியாவை இருவேறு தனித்தனி நாடுகளாக பிரித்தனர். முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை உள்ளடக்கி இரு பிரிவுகள் பிரிக்கப்பட்டது.
இதுவே தற்போதைய பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகும். இது தேசிய பிரிவினை கொடுமைகள் நினைவு தினமான அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கப்பட்டது.
இதுகுறித்து அரசு பள்ளி என்.சி.சி. மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கீதா தலைமையில், என்.சி.சி., மாணவி, மாணவிகளுக்கு தேச பிரிவினையின் துயரங்கள் குறித்து காணொளி காட்சிகள் மூலம் விளக்கப்பட்டது.
தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியை கீதா, வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். பள்ளிகளின் என்.சி.சி., அலுவலர்கள் ஜெரால்ட் மெர்ஜில்லா, நுாருண்ணிஷா ஆகியோர் என்.சி.சி., மாணவர்கள் எப்போதும் தேசப்பற்றுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.