/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி ராஜு இதயம், தோல் மருத்துவமனை 6ம் ஆண்டு துவக்க விழா
/
கள்ளக்குறிச்சி ராஜு இதயம், தோல் மருத்துவமனை 6ம் ஆண்டு துவக்க விழா
கள்ளக்குறிச்சி ராஜு இதயம், தோல் மருத்துவமனை 6ம் ஆண்டு துவக்க விழா
கள்ளக்குறிச்சி ராஜு இதயம், தோல் மருத்துவமனை 6ம் ஆண்டு துவக்க விழா
ADDED : செப் 03, 2024 11:43 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி சுந்தர விநாயகர் கோவில் தெருவில் கடந்த 1982ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் ராஜு இதயம்-தோல் மருத்துவமனை, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு, அதன் 6-ம் ஆண்டு துவக்க விழா நேற்று நடந்தது.
தலைமை மருத்துவரான இருதய சிகிச்சை நிபுணர் பாபுசக்கரவர்த்தி தலைமையில், தோல் சிகிச்சை நிபுணர் டாக்டர் இந்துபாலா முன்னிலையில் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சி துவக்கினர். நிகழ்ச்சியி்ல டாக்டர்கள் பாபுசக்கரவர்த்தி, இந்துபாலா ஆகியோர் அனைவருக்கும் நினைவுப்பரிசுகள் வழங்கினர்.
பெருநகரங்களில் நடக்கும் இருதய சிகிச்சை மற்றும் உயர்தர லேசர் டெக்னாலஜியுடன் கூடிய தோல் சிகிச்சைகள் இங்கு அளிக்கப்படுகின்றன. 24 மணி நேர இருதய அவசர சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. இதுவரை 2,500க்கும் மேற்பட்ட ஆஞ்சியோ இருதய சிகிச்சைகள் இங்கு வெற்றிகரமாக நடந்துள்ளது.
இங்கு ராஜு பாராமெடிக்கல் கல்லுாரி துவங்கப்பட்டு, குறைந்த கட்டணத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என டாக்டர் பாபுசக்கரவர்த்தி தெரிவித்தார். டாக்டர் இந்துபாலா நன்றி கூறினார்.