/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்
/
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்
ADDED : மே 28, 2024 05:46 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் வெங்கடாசலம், நெடுஞ்செழியன், அண்ணாதுரை, சத்தியமூர்த்தி, பெருமாள், துரைமுருகன், பாரதிதாசன், கனகராஜ், ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, அய்யனார், அசோக்குமார், பேரூர் செயலாளர்கள் மலையரசன், ஜெய்கணேஷ் முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ.,சிறப்புரையாற்றினார். கள்ளக்குறிச்சி நகர செயலாளர் சுப்ராயலு வரவேற்றார்.
வரும் ஜூன் 3-ஆம் தேதி கருணாநிதியின் 101-வது பிறந்தநாள் விழாவை அனைத்து பகுதிகளிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது.
உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முருகன், எத்திராஜ், மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் சித்தார்த்தன், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் காமராஜ், அண்ணாதுரை, புவனேஸ்வரி பெருமாள், பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜு, மஞ்சுளா கணேசன், ராஜேந்திரன், பேரூராட்சி சேர்மன் வீராசாமி, ஒன்றிய சேர்மன்கள் தாமோதரன், வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன், மாவட்ட இளைஞரணி தாகப்பிள்ளை, உதயா மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.