
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அடுத்த பங்காரம் லட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் கம்பன் விழா நடந்தது.
கல்லுாரி தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகப்பன், இயக்குனர் சரவணன், பொருளாளர் சாந்தி, ஒருங்கிணைப்பளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். தமிழ்த்துறை பேராசிரியர் பெரியசாமி வரவேற்றார். கல்லுாரி முதல்வர்கள் பழனியம்மாள், பாஸ்கரன் வாழ்த்திப் பேசினர்.
சிறப்பு விருந்தினர்கள் தியாகதுருகம் கவி கம்பன் கழக நிர்வாகிகள் நல்லாப்பிள்ளை, சுலைமான் ஆகியோர் பேசினர். தொடர்ந்து மாணவர்களின் பட்டி மன்றம், கவிதை, பேச்சு மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடந்தன.