/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கபிலர் விழாவில் தமிழறிஞருக்கு விருது
/
கபிலர் விழாவில் தமிழறிஞருக்கு விருது
ADDED : ஜூலை 22, 2024 01:10 AM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் கபிலர் விழாவில் தமிழறிஞர் விருது மற்றும் பொற்கிழி வழங்கும் விழா நடந்தது.
திருக்கோவிலுார் பண்பாட்டுக் கழகம் சார்பில் நடைபெற்று வரும் கபிலர் விழாவில் நேற்று காலை 10:30 மணிக்கு பண்பாட்டுக் கழக தலைவர் தியாகராஜன் தலைமையில் நினைவரங்கம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு தமிழ் அறிஞர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
நகரமன்ற தலைவர் முருகன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். திருக்கோவிலுார் தமிழ்ச்சங்கத் தலைவர் உதியன், விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப் பள்ளி முதல்வர் இந்திரா தலைமையில் ஊர்வலம் விழா அரங்கை அடைந்தது.
பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தொழிலதிபர் ராகவேல் பரிசுகளை வழங்கினார்.
பாராட்டு அரங்கம், நுால் வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து நடந்த கபிலர் விருது வழங்கும் விழாவிற்கு, தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் தலைமை தாங்கி, முனைவர் பிரேமா நந்தகுமாருக்கு 'கபிலர் விருது' மற்றும் பொற்கிழிகளை வழங்கி பேசினார். பாரதி கிருஷ்ணகுமார் நன்றி கூறினார்.