/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கல்லுாரி மாணவி கடத்தல்; வாலிபர் மீது போலீசார் வழக்கு
/
கல்லுாரி மாணவி கடத்தல்; வாலிபர் மீது போலீசார் வழக்கு
கல்லுாரி மாணவி கடத்தல்; வாலிபர் மீது போலீசார் வழக்கு
கல்லுாரி மாணவி கடத்தல்; வாலிபர் மீது போலீசார் வழக்கு
ADDED : செப் 06, 2024 12:12 AM
தியாகதுருகம் : தியாகதுருகம் அருகே மைனர் பெண்ணை கடத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தியாகதுருகம் அடுத்துள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும்15 வயது மாணவியை கடந்த 31ம் தேதி முதல் காணவில்லை.
இதுகுறித்து பெண்ணின் தந்தை தியாகதுருகம் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரில், தனது மகளை அவர் படிக்கும் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் சின்னசேலம் புது காலனியை சேர்ந்த சுரேஷ்குமார் மகன் அருண்குமார், 19; என்பவர் கடத்தி சென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து கல்லுாரி மாணவியை கடத்திய அருண்குமாரை தேடி வருகின்றனர்.