/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கிருஷ்ணன் கோவில் கும்பாபிேஷகம்
/
கிருஷ்ணன் கோவில் கும்பாபிேஷகம்
ADDED : ஆக 24, 2024 06:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நவநீத கிருஷ்ணன் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.
கள்ளக்குறிச்சி ராதா ருக்மணி சமேத நவநீத கிருஷ்ணன் கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது. இதனையொட்டி நேற்று காலை பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் செய்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து சாற்றுமுறை ஸ்ர்வ தரிசனம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் செய்து வைக்கப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. நிகழ்ச்சியில் பக்தர்கள் பலர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

