/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தாகூர் ஜீவன் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
/
தாகூர் ஜீவன் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : மே 12, 2024 05:59 AM
சின்னசேலம்: சின்னசேலம் தாகூர் ஜீவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வில் மாணவ, மாணவிகள் சிறந்த மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர் ஆர்ஜூன் 600க்கு 572, மாணவி அபிநயா 553, மாணவர் கவுதம்ராஜ் 541 மதிப்பெண் பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்தனர். மேலும், 550 மதிப்பெண்ணுக்கு மேல் மேல் 2 பேர், 525க்கு மேல் 4 பேர், 500க்கு மேல் 12 பேர் எடுத்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு தேர்வில் மாணவி லோகநாயகி 500க்கு 484, பிரியதர்ஷினி 476, விஜயபாலாம்பிகை 470 மதிப்பெண் பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்தனர்.
தேர்வு எழுதிய 30 மாணவ, மாணவிகளில் 17 பேர் 400 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி முதல்வர் மணிகண்டன் பாராட்டி, பரிசு வழங்கி கவுரவித்தார்.
ஆசிரியர்கள், பெற்றோர்கள் உடனிருந்தனர்.