/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சித்தலுாரில் ஹரிஹரபுத்ர கோவில் கும்பாபிஷேகம்
/
சித்தலுாரில் ஹரிஹரபுத்ர கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 13, 2024 06:20 AM
கள்ளக்குறிச்சி: சித்தலுாரில் ஹரிஹர புத்ர சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த சித்தலுாரிலுள்ள பூர்ணபுஷ்கலா சமேத ஹரிஹரபுத்ர சுவாமி கோவில் திருப்பணிகள் நிறைவுற்றது. வேதசிவாகம முறைப்படி கும்பாபிஷேக பெருவிழா மூன்று நாட்கள் நடந்தது. கடந்த 9-ம் தேதி காலை கணபதி, மகாலஷ்மி, நவகிரக சுவாமிகளுக்கு யாகம் மற்றும் சுமங்கலி, கன்யா, பிரம்மசாரி பூஜைகள் நடத்தப்பட்டது.
மாலையில் பிரவேசபலி, அஷ்டபலி, வாஸ்துசாந்தி பூஜைகளுக்குப்பின் யாகசாலை பிரவேசம் நடத்தப்பட்டது. வேதிகை மேடைகளில் சுவாமி கும்பகலசங்களை ஆவாஹனம் செய்து, 10 மற்றும் 11 தேதிகளில் காலை, மாலை வேதிகை பூஜை, யாகங்கள் நடத்தப்பட்டது.
நேற்று காலை சூர்ய பூஜை, பசு பூஜை, யாத்ரா தானம் ஆகியவற்றுக்குப்பின், புனித நீரூற்றி பூர்ண புஷ்கலா சமேத ஹரிஹரபுத்ர சுவாமி மற்றும் பரிவார சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் செய்தனர்.