/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஏந்தல் கிராமத்தில் அம்சார் அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
/
ஏந்தல் கிராமத்தில் அம்சார் அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ஏந்தல் கிராமத்தில் அம்சார் அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ஏந்தல் கிராமத்தில் அம்சார் அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : செப் 16, 2024 06:41 AM

ரிஷிவந்தியம், : ஏந்தல் கிராமத்தில் அம்சார் அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அடுத்த ஏந்தல் கிராமத்தில் அம்சார் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவஜனம், அனுக்ஜை, வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம், நவக்கிரக பூஜை, லட்சுமி ஹோமம், கோபூஜை நடத்தப்பட்டன
நேற்று காலை 10:10 மணிக்கு அம்சார் அம்மனுக்கு புனித நீருற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.