/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஏரி வாய்க்கால்கள் முழுமையாக துார்வார நடவடிக்கை தேவை
/
ஏரி வாய்க்கால்கள் முழுமையாக துார்வார நடவடிக்கை தேவை
ஏரி வாய்க்கால்கள் முழுமையாக துார்வார நடவடிக்கை தேவை
ஏரி வாய்க்கால்கள் முழுமையாக துார்வார நடவடிக்கை தேவை
ADDED : ஜூன் 12, 2024 07:19 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பகுதியில் ஏரிக்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால்களை துார்வாரிட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சியில் கோமுகி, மணிமுக்தா என இரு அணைகள் மூலம் நிர்ப்பாசனம் பெற்று விவசாய தொழிலே பிரதானமாக இருந்து வருகிறது.
இவ்விரு அணைகளில் இருந்தும் திறந்துவிடப்படும் தண்ணீர் நீர்வரத்து வாய்க்கால்கள் இங்குள்ள ஏரிகளை நிரப்பி விவசாய பணிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் இங்குள்ள ஏரி வரத்து வாய்க்கால்கள் மற்றும் உபரிநீர் வெளியேறும் வாய்க்கால்கள் அனைத்தும் புதர்மண்டி மண் சரிந்து துார்ந்து போய் கிடப்பதால் ஏரிகளில் தண்ணீர் நிரம்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் கடைமடை வரை தண்ணீர் செல்லாமல், தேங்கி நின்று பயன்பாடின்றி வீணாகிறது. எனவே கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள ஏரி வாய்க்கால்கள் முழுவதுதையும், ஆக்கிரமிப்புகளை அகற்றி துார்வாரி சரிசெய்திட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.