/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெருமாள் கோவிலில் லட்சார்ச்சனை விழா
/
பெருமாள் கோவிலில் லட்சார்ச்சனை விழா
ADDED : ஆக 10, 2024 06:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் லட்சார்ச்சனைவிழா நடக்கிறது.
ஆடிப்பூரா தினத்தை முன்னிட்டு லட்சார்ச்சனை உற்சவம் துவங்கியது. மகாலட்சுமி தாயாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும் தொடர்ந்து ஸ்ரீசுத்த யாகமும் நடந்தது.
விஸ்வக்சேனர் பூஜை, புண்ணியாகவஜனம், கலச ஆவாஹணம் செய்து லட்சார்ச்சனை துவங்கியது.
தேசிக பட்டர் தலைமையில் 5 பட்டாச்சாரியார்கள் ஆடி மாத 4ம் வெள்ளிக்கிழமையான நேற்று வரை 3 நாட்கள் ஒரு லட்சம் மந்திரங்களை வாசித்து மஞ்சளால் மகாலட்சுமி அர்ச்சனை செய்து உற்சவத்தை நிறைவு செய்தனர்.