/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பார்சல் லாரி மோதி வழக்கறிஞர் பலி
/
பார்சல் லாரி மோதி வழக்கறிஞர் பலி
ADDED : செப் 04, 2024 03:53 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் ஸ்கூட்டி மீது பார்சல் சர்வீஸ் லாரி மோதி வழக்கறிஞர் இறந்தார்.
உளுந்துார்பேட்டை அடுத்த பின்னல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் வீரன் மகன் வெங்கடேசன்,45; வழக்கறிஞர். இவர் நேற்று கள்ளக்குறிச்சியில் நீதிமன்ற அலுவல் பணிகளை முடித்து விட்டு பகல் 12.40 மணியளவில் ஸ்கூட்டியில் ஊருக்கு திரும்பினார். கள்ளக்குறிச்சி-துருகம் சாலையில் சென்றபோது பின்னால் வந்த பார்சல் சர்வீஸ் லாரி ஸ்கூட்டி மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த வழக்கறிஞர் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபாக இறந்தார்.
புகாரின் பேரில் பார்சல் சர்வீஸ் லாரி டிரைவரான ஆத்துார் அடுத்த கீரிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மீது, கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.