ADDED : செப் 08, 2024 06:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம்: தெங்கியாநத்தம் கிராமத்தில் மது பாட்டில் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் காலையில் தெங்கியாநத்தம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது பஸ் நிறுத்தம் அருகே மது பாட்டில் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன், 45; என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 24 மது பாட்டில்கள் மற்றும் பைக்கையும் பறிமுதல் செய்தனர்.