/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தடுப்புக் காவலில் சாராய வியாபாரி கைது
/
தடுப்புக் காவலில் சாராய வியாபாரி கைது
ADDED : ஆக 31, 2024 03:45 AM

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே சாராய வியாபாரி தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
சின்னசேலம் அடுத்த கல்லாநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் வேலு, 50; சாராய வியாபாரியான இவர் மீது சின்னசேலம் போலீஸ் ஸ்டேஷனில் சாராய வழக்குகள் உள்ளது. இருப்பினும் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தார்.
அவரது நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்.பி., ரஜத்சதுர்வேதி கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் கலெக்டர் பிரசாந்த் சாராய வியாபாரி வேலுவை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
இதனையடுத்து ஏற்கனவே சாராய வழக்கில் கைது செய்யப்பட்டு கடலுார் மத்திய சிறையில் உள்ள வேலுவிடம், தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆணையை போலீசார் வழங்கினர்.