ADDED : மே 10, 2024 09:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: மணியார்பாளையத்தில் சாராயம் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, வீட்டின் பின்புறம் சாராயம் விற்ற மணியார்பாளையத்தைச் சேர்ந்த சின்ராசு மகன் சுரேஷ், 30; என்பவரை கைது செய்து, 240 லிட்டர் சாராயம் மற்றும் 220 ரூபாயை பறிமுதல் செய்தனர்.