ADDED : ஜூன் 16, 2024 10:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே காணாமல் போன சிறுமி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த கண்டாச்சிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் மகள் சுஜாதா, 16; இவர் கடந்த 12ம் தேதி வேளாக்குறிச்சியில் நடந்த திருவிழாவிற்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதனையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.