ADDED : ஆக 07, 2026 07:31 PM
அ நிறம் | அளவு
கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு 1:00 மணியளவில் கச்சிராயபாளையம் – பொட்டியம் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தியதும், லாரி டிரைவர் உட்பட 4 பேர் லாரியை விட்டுவிட்டு தப்பியோடினர்.
லாரியை போலீசார் சோதனை செய்ததில் அதில் 3 யூனிட் மணல் கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்தனர்.
மேலும் கோட்டக்கரை கிராமத்தைச் சேர்ந்த அச்சப்பன் மகன் மோகன், 38; மற்றும் அடையாளம் தெரியாத 3 பேர் மீதும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
