/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மா.கம்யூ., கண்டன ஆர்ப்பாட்டம்
/
மா.கம்யூ., கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 29, 2024 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம், : சங்கராபுரத்தில் மா.கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்தும் சங்கராபுரம் கடைவீதி மும்முனை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் சிவாஜி தலைமை தாங்கினார்.
கிளை செயலாளர்கள் வெங்கடேசன், ராமர், சின்னதுரை, கோவிந்தன், மூர்த்தி முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆனந்தன்,மாவட்ட குழு உறப்பினர் சசிகுமார், மணிமாறன், பாஸ்கர், முரளி, பச்சையப்பன் உள்ளிட்டவர்கள் பேசினர்.
நகர செயலாளர் மாரியாபிள்ளை நன்றி கூறினார்.