/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மன்னார்சாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழா
/
மன்னார்சாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழா
ADDED : மே 03, 2024 11:52 PM

மூங்கில்துறைப்பட்டு, - மூங்கில்துறைப்பட்டு அடுத்த ரங்கப்பனுார் மன்னார் சாமி கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.
விழாவையொட்டி, கடந்த கடந்த மாதம் 29ம் தேதி காலை 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி பிரவேச பலி மற்றும் புற்றுமான் எடுத்து வருதல் பலிகை பூஜைகள் இதனைத் தொடர்ந்து தினமும் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. தொடர்ந்து யாக சாலை பூஜைகள் நடந்தது.
நேற்று காலை 9::30 மணிக்கு கடம் புறப்படாகி 10:00 மணிக்கு மன்னார்சாமி, பால விநாயகர், பாலமுருகன், பச்சையம்மன், முனீஸ்வரர்கள், நவகிரகங்கள் கன்னிமார், பாவாடை ராயர், மகா மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.