ADDED : ஏப் 26, 2024 11:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கச்சிராயபாளையத்தில் போலீசாரை தாக்கிய சிறுவனை கைது செய்தனர்.
கச்சிராயபாளையம் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் நேற்று காலை 10 மணியளவில் ரோந்து சென்றார். அப்போது, கச்சிராயபாளையம் வங்கி நிறுத்தம் அருகே, அதே பகுதியை சேர்ந்த ஜெயராமன் மகன் உதயகுமார்,18; என்பவர் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், அசிங்கமாக திட்டி கொண்டிருந்தார்.
இதை போலீசார் தடுத்தனர். அப்போது, சிறுவன் உதயகுமார் போலீசாரை தாக்கினார். இதையடுத்து சிறுவன் உதயகுமாரை கச்சிராயபாளையம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

