/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
டெம்போ டிரைவரை தாக்கியவர் கைது
/
டெம்போ டிரைவரை தாக்கியவர் கைது
ADDED : ஆக 02, 2024 11:31 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் டெம்போ டிரைவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த விளாந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன், 45; டெம்போ டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு 7:30 மணியளவில் கச்சிராயபாளையம் சாலையில் அவரது நண்பர் தண்டபாணியுடன் நின்று கொண்டிருந்தார்.
அப்போது மதுபோதையில் வந்த கள்ளக்குறிச்சி வாய்க்கால் மேட்டு தெருடைவச் சேர்ந்த டெம்போ டிரைவர் சேகர், 29; என்பவர் கோவிந்தன், அவரது நண்பர் தண்டபாணி ஆகியோரிடம் தகராறு செய்த, இரும்பு பைபால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து சேகரை கைது செய்தனர்.