/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வீட்டின் ஓட்டை பிரித்து நகை திருடியவர் கைது
/
வீட்டின் ஓட்டை பிரித்து நகை திருடியவர் கைது
ADDED : செப் 07, 2024 05:19 AM
கள்ளக்குறிச்சி : வாணியந்தலில் வீட்டின் ஓட்டை பிரித்து 4 சவரன் நகையை திருடி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள வாணியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் மனைவி ராதா,39; இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் நடந்த திருமண விழாவில் பங்கேற்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார்.
அப்போது, வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே புகுந்த மர்மநபர் பீரோவில் இருந்த 4 சவரன் தங்க நகையை திருடி சென்றனர். சிறிது நேரத்திற்கு பிறகு வீட்டிற்கு வந்த ராதா, ஓடு பிரிந்து கிடப்பதையும், பீரோ திறந்து கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்து, நடந்த சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அகரகோட்டாலத்தை சேர்ந்த பரணிசாமி மகன் அஜித்குமார்,24; என்பவர் நகையினை திருடியது தெரிந்தது. இதையடுத்து, அஜித்குமாரை கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.