/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பிரசாரம் செய்த தி.மு.க.,வினரை கத்தியை காட்டி மிரட்டியவர் கைது; சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு

ADDED : ஏப் 05, 2024 06:26 AM

மூங்கில்துறைப்பட்டு : கள்ளக்குறிச்சி அருகே ஓட்டு சேகரிக்க சென்ற தி.மு.க.,வினரை, கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை கைது செய்யக்கோரி நடந்த சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு அடுத்த பிரம்மகுண்டத்தில் நேற்று காலை, தி.மு.க., சங்கராபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் அசோக்குமார் தலைமையில், தி.மு.க., வேட்பாளர் மலையரசனை ஆதரித்து மகளிர் அணி திண்ணை பிரசாரம் செய்ய சென்றனர்.
அங்கு, வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி, பிரசாரம் செய்யக்கூடாது என மிரட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க., வினர் வட பொன்பரப்பி பஸ் நிலையத்தில் பகல் 12:00 மணியளிவல் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து பிரம்மகுண்டத்தைச் சேர்ந்த அண்ணாமலை மகன் பிரபு, 37; என்பவரை கைது செய்தனர். அதையடுத்து 1:30 மணிக்கு மறியல் கைவிடப்பட்டது. சாலை மறியலால் திருவண்ணாமலை-கள்ளக்குறிச்சி சாலையில் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.