/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மேலாண்மை குழு மறு சீரமைப்பு தேர்தல்
/
மேலாண்மை குழு மறு சீரமைப்பு தேர்தல்
ADDED : ஆக 25, 2024 06:33 AM

சங்கராபுரம்: அரசம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு மறு சீரமைப்பு தேர்தல் நடந்தது.
தலைமை ஆசிரியர் ராமசாமி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் இளங்கோவன், ஊராட்சி தலைவர் வாசுகி கருணாநிதி, பள்ளி மேலாண்மைக் குழு முன்னாள் தலைவர் ராணி, ஆசிரியர்கள் ஏழுமலை, சுரேஷ், குமார், ராமகிருஷ்ணன், ேஷாபா முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் வரவேற்றார். தேர்தல் பார்வையாளராக ரவிந்திரன் பங்கேற்றார்.
பள்ளி மேலாண்மைக் குழு புதிய தலைவராக பொன்மணி, துணைத் தலைவராக கண்ணன் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஓவிய ஆசிரியர் சவுந்தர்ராஜன் நன்றி கூறினார்.