/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மணலுார்பேட்டை பேரூராட்சியில் கலெக்டர் பிரசாந்த் நேரில் ஆய்வு
/
மணலுார்பேட்டை பேரூராட்சியில் கலெக்டர் பிரசாந்த் நேரில் ஆய்வு
மணலுார்பேட்டை பேரூராட்சியில் கலெக்டர் பிரசாந்த் நேரில் ஆய்வு
மணலுார்பேட்டை பேரூராட்சியில் கலெக்டர் பிரசாந்த் நேரில் ஆய்வு
ADDED : செப் 11, 2024 11:10 PM

திருக்கோவிலுார் : மணலுார்பேட்டையில் கால்நடை மருந்தகம் அருகே புதிய பேரூராட்சி அலுவலகம் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தினை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
கலெக்டர் பிரசாந்த் நேற்று மணலுார்பேட்டை பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணி திட்டங்களை நேரில் ஆய்வு செய்தார். ரூ. 39 லட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு செய்யப்பட்டுள்ள சமுதாயக்கூடம் கட்டுமான பணியை பார்வையிட்டார்.
தொடர்ந்து கால்நடை மருந்தகம் எதிரில் ரூபாய் 1.24 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள பேரூராட்சி அலுவலக கட்டிடம் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டார். அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணியை ஆய்வு செய்தார்.
நடைபெற்று வரும் பணிகளை தரமாகவும், விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். மேலும் ரூ. 22 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் நூலக கட்டுமான பணி, பள்ளி சுற்றுச்சுவர் கட்டுமானங்களை பார்வையிட்டார்.
ஆய்வின் போது பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரி, பேரூராட்சி தலைவர் ரேவதி ஜெய்கணேஷ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.