/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாரியம்மன் கோவில் தீ மிதி விழா
/
மாரியம்மன் கோவில் தீ மிதி விழா
ADDED : ஆக 19, 2024 12:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தியாகதுருகம்: தியாகதுருகம் சொர்ணாம்பிகை மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது.
விழா, கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு தீபாராதனை மற்றும் வீதியுலா நடந்தது.
முக்கிய விழாவாக நேற்று முன்தினம் தீ மிதி திருவிழாவையொட்டி, மாலை 6:00 மணிக்கு சந்தை மேட்டில் இருந்து சக்தி கரகம் எடுத்துச் செல்லப்பட்டு கோவில் எதிரில் தீமிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

