/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சிறுமிகளுக்கு திருமணம் பெற்றோர் மீது வழக்கு
/
சிறுமிகளுக்கு திருமணம் பெற்றோர் மீது வழக்கு
ADDED : ஆக 02, 2024 02:18 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதியில் வெவ்வேறு இடங்களில் 17 வயது சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைத்த, பெற்றோர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் ராமர் மகன் நரசிம்மன். இவருக்கு கடந்த பிப்ரவரி 22ம் தேதி 17 வயது சிறுமியை இரு வீட்டார் சேர்ந்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.
அதேபோல், புக்கிரவாரியைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் அருண்குமார் என்பவர் 17 வயது சிறுமியை கடந்த 9ம் தேதி திருமணம் செய்துள்ளார்.
மேலும், அகரகோட்டாலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் ஏழுமலை என்பவர் கடந்த பிப்ரவரி 3ம் தேதி 17 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார்.
இந்த 3 திருமணங்கள் குறித்தும் முறையே சமூக நல விரிவாக்க அலுவலர் வள்ளி, ஊர்நல அலுவலர் செல்வி, ஊர்வல அலுவலர் கலைச்செல்வி ஆகியோர் கொடுத்த புகார்களின் பேரில், நரசிம்மன், அருண்குமார், ஏழுமலை மற்றும் பெற்றோர்கள் உட்பட 13 பேர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.