/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ம.தி.மு.க., 31ம் ஆண்டு கொடியேற்று விழா
/
ம.தி.மு.க., 31ம் ஆண்டு கொடியேற்று விழா
ADDED : ஆக 02, 2024 02:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் ம.தி.மு.க.,வின் 31ம் ஆண்டு கொடியேற்று விழா நடந்தது.
விழாவிற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் சந்திரா ஜெகநாதன் கொடியேற்றினார்.
ஒன்றிய செயலாளர் அருள், நகர அவைத் தலைவர் தனசேகர், மாவட்ட துணைச் செயலாளர் முனிர்கான், திருநாவலுார் ஒன்றிய செயலாளர் கணேஷ்குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏழுமலை.பொதுக்குழு உறுப்பினர் சம்பத், வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் வெங்கடேசன், ஒன்றிய துணைச் செயலாளர் ஞானவேல் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.