/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
காவல்துறையினருக்கு தேர்தல் விதிமுறைகள் குறித்த கூட்டம்
/
காவல்துறையினருக்கு தேர்தல் விதிமுறைகள் குறித்த கூட்டம்
காவல்துறையினருக்கு தேர்தல் விதிமுறைகள் குறித்த கூட்டம்
காவல்துறையினருக்கு தேர்தல் விதிமுறைகள் குறித்த கூட்டம்
ADDED : ஏப் 17, 2024 11:57 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி எஸ்.பி., சமய்சிங் மீனா தலைமையில் காவல்துறையினருக்கு தேர்தல் விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி தனியார் திருமண மண்டபத்தில் எஸ்.பி., சமய்சிங் மீனா தலைமையில், மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர்கள் அசோக்குமார் கார்க், செலவின பார்வையாளர் மனோஜ்குமார் சர்மா முன்னிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடக்க உள்ள லோக்சபா தேர்தலில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள காவல்துறையினருக்கு தேர்தல் விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் பேசிய எஸ்.பி.,:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்தல் ஜனநாயக முறைப்படி பாதுகாப்பாகவும் அமைதியாகவும் நடைபெற வேண்டும். அதற்கு ஒவ்வொரு காவலர்களும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை பொதுமக்களிடையே எடுத்துக்கூறி தேர்தலை அமைதியாக நடத்த ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மேலும் தேர்தல் நேரத்தில் ஓட்டுச்சாவடிகளில் ஏதேனும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டால் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் ஏடி.எஸ்.பி.,க்கள் மணிகண்டன், டி.எஸ்.பி.,க்கள், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், காவல் அலுவலர்கள் மற்றும் மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

